top of page

Tanglish Talks: Downpour

Nov 9, 2021
1 min read

I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

பாவம் வானம். அதுக்கு மட்டும் மூச்சா வராதா? எவ்வளவு நாள் தான் அடக்கிக்கொண்டிருக்கும்? நாம் சாலை ஓரத்தில் சாதாரணமாக சலனமே இல்லாமல் poster-இல் இருக்கும் hero மேலேயோ heroine மேலேயோ அடிக்கிறோமே! அதை மூத்திரம் என்கிறோம். இதை மழை என்கிறோம்.

ஒரு நாள் கனவில் வானம் வந்தது. உருவமே இல்லாமல் உருளும் கர்ஜனைகளில் பேசும்போது காதை கொஞ்சம் பொத்தி கொண்டேன். எனக்கு எக்கச்சக்க கேள்விகள். எல்லாத்தையும் கேட்டேன்.

உங்களுக்கு bladder problem வந்தால் யார் மருத்துவம் பார்ப்பார்கள்? theatre-இல் படம் பார்க்கும் போது interval-க்கு முன்னால் போக வேண்டும் என்ற நிலைமை வந்தால் அடக்கி கொள்வீர்களா? இல்லை அமைதியாக உட்கார்ந்திருக்கும் மற்ற மேகங்களின் கால்கைகளை மித்துக்கொண்டே, “sorry sorry” என்று சொல்லி கொண்டே, toilet-ஐ தேடி போவீர்களா? அதான் திடீர்-திடீர் என்று வியாசற்படியிலோ மந்தைவெளியிலோ ஒரு shower வருகிறதா?

விமானத்தில் பறக்கும்போது உங்களை பார்த்துக்கொண்டே இருப்பேன் என்றேன். காலை-மாலை வேளைகளில் சிவந்த உடைகள் அணியும்போது மிகவும் ரசிப்பேன் என்றேன். கொஞ்சம் மூஞ்சி சுளுக்கிய மாதிரி தெரிந்தது. உடனே, ஐயோ நான் pervert இல்லை உங்கள் bedroom எங்கே என்று எனக்கு தெரியவே தெரியாது. உங்கள் dress sense-ஐ மட்டுமே கவனிப்பேன் என்றேன். வானம் சிரித்தது. உலகமே இரண்டாக பிளக்கும் சத்தம். முழிப்பு வந்து விட்டது.

இப்போது பேய் மழையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். கையில் ஒரு black coffee பிடித்துக்கொண்டு.

 
 
 

Comments


bottom of page