top of page

Tanglish Talks: A Hero’s Journey (with due apologies to Joseph Campbell)

Jun 4, 2021
1 min read

I keep writing scenes and other random stuff. Thought they’d make for fun blog posts, titled ‘Tanglish Talks’. Do read, share, mock, comment, ring the bell icon, whatever 🙂 !

என் வளர்ப்பு ஒரு அனாதை ஆசிரமத்தில். களத்தூர் என்கிற இடத்தில் ஏதோ ஒரு மூலை. தினம் காலையில் கடவுள் வாழ்த்து பாட வைப்பார்கள். “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…” என்று போகும்… கன்னத்தை கிள்ள வைக்கும் முகம். பணக்காரர்கள் இருவர் வந்தார்கள். மிகவும் சுமாரான மளிகை கடையில் பட்டு புடவை தேடுவதை போல் அவர்கள் கண்கள் இங்கும் அங்கும் பாய்ந்தன. என்னை கண்டவுடன் “இனிமே அம்மா நாந்தான் அப்பா நாந்தான்” என்று கொத்தி கொண்டு போனார்கள்.

என்னை சகலகலாவல்லவநாக பார்க்க அவர்களுக்கு ஆசை. கராத்தே ஜூடோ வயலின் கர்நாடக சங்கீதம் அது இது என்று என்னென்னமோ கற்று கொண்டேன். அனால் சினிமா தான் எனக்கு அம்மா-அப்பா- குரு-தெய்வத்துக்கும் மேல். பெரிய திரையில் என் முகம் பெரிதாக தெரிய வேண்டும். வேறு யாரோ பாடிய பாடல்களுக்கு வாயசைத்து உதட்டுச்சாயம் போட்ட பெண்களுடன் ஆட வேண்டும். முரட்டு மனிதர்களுடன் போலி சண்டை போட வேண்டும். காதல் சரிவரவில்லை என்றால் நீர்வீழ்ச்சி மேலிருந்து பாதாளத்தில் குதிக்க வேண்டும்.

அனால் அப்பாவுக்கு விருப்பமில்லை. பொறியியல் படிக்க வேண்டும் என்றார். நான் எனக்காக மக்கள் மனதில் மின்னலடிக்கும் மாளிகை கட்டிக்கொண்டிருக்கொம்போது அடுக்குமாடி வீடுகளை கட்ட தயாரானேன்.

வருடங்கள் சினிமா கனவை போல ஓடின. குடும்பத்துடன் தியேட்டரில் விலையுயர்ந்த பாப்கார்ன் வாயில் திணித்துக்கொண்டு, நானிருக்க வேண்டிய இடத்தில் இன்னொருவன் நடித்துக்கொண்டிருப்பதை பார்ப்பதோடு சரி. அனால் இன்னும் அவ்வப்போது சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே சிறுதூக்கம் ஒன்று போடும் போது மனத்திரையில் டிஷூம்-டிஷூம் போட்டு விட்டு உதட்டுச்சாயம் போட்ட பெண்களை காப்பாற்றுவேன். அப்படி பார்த்தல் அந்த ஒரு நிமிடத்துக்கு நானும் ஹீரோ தானே!

 
 
 

Comments


bottom of page